நெல்லை மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தகவல்


நெல்லை மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தகவல்
x
தினத்தந்தி 17 May 2018 2:00 AM IST (Updated: 16 May 2018 8:21 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 47 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று நெல்லை கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆதார் அட்டை திருத்தும் பணி 

இந்திய அஞ்சல்துறையும், உதய் நிறுவனமும் இணைந்து தபால் நிலையங்களில் ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் பணி ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த சேவை நெல்லை கோட்டத்தில் முதன்முதலாக நெல்லை ஸ்ரீபுரம் தலைமை தபால் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது நெல்லை கோட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, அம்பை, ஆழ்வார்குறிச்சி, சேரன்மாதேவி, கடையம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூர், ஏர்வாடி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, பணகுடி, ராதாபுரம், திசையன்விளை, வடக்கன்குளம், வள்ளியூர், பேட்டை, மகாராஜநகர், மானூர், மேலப்பாளையம், பெருமாள்புரம், சங்கர்நகர், தச்சநல்லூர், நெல்லை கலெக்டர் அலுவலக தபால்நிலையம், நெல்லை டவுன், தொழிற்பேட்டை, வண்ணார்பேட்டை, கீழஆம்பூர், பாப்பாக்குடி, பாபநாசம், பத்தமடை, பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பர்கிட்மாநகரம், இடையன்குடி, மருதகுளம், முனைஞ்சிப்பட்டி, முன்னீர்பள்ளம், மூன்றடைப்பு, பரப்பாடி, சமூகரெங்கபுரம், தெற்கு கள்ளிகுளம், தெற்கு கருங்குளம், கங்கைகொண்டான் ஆகிய 46 தபால்நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கட்டணம் 

புதியதாக ஆதார் எண் பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் ஆதார் அட்டையில் திருத்தம், ரேகை மறுபதிவு செய்வோருக்கும் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். ஆதார் அட்டை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் எடுத்து கொடுத்தால் கட்டணமாக ரூ.12–ம், கலரில் பிரிண்ட் எடுத்து கொடுத்தால் கட்டணமாக ரூ.24–ம் வசூலிக்கப்படும். இந்த வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்து கொள்ளலாம்.

 இவ்வாறு அவர் கூறினார். அப்போது மக்கள் தொடர்பு அலுவலர் சபாபதி உடன் இருந்தார். 

Next Story