மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலி பறிப்பு + "||" + Thali chain flush into the house

நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா(வயது 29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பின்பக்கம் வழியாக ஏறிக்குதித்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான். சுகன்யாக கத்தி கூச்சலிடவே கண் விழித்த கணவர் சுதாகர் மர்ம நபரை விரட்டி சென்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.