டாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


டாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:45 PM GMT)

டாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலு வலகத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் இருந்து வேப்படிபாலகாடு செல்லும் சாலையோரத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், கடை வழியாக செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று முன்தினம் பெரியம்மாபாளையம் பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியம்மாபாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

குடிநீர் தொட்டி

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கோரையாறு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கோரையாறு கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. அந்த குடிநீர் தொட்டியை, அதன் ஆபரேட்டர் சரிவர பராமரிப்பதில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரை குடித்தால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த குடிநீர் தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சில சரிவர எரிவதில்லை. தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story