மாவட்ட செய்திகள்

ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் + "||" + A young man who snatched the cell phone on the passenger train to 3 years in jail

ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் நிக்லேஷ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி சர்ச்கேட்டிற்கு மின்சார ரெயிலில் சென்றார். இதில், ரெயில் கார்- பாந்திரா இடையே சென்ற போது வாசலில் நின்ற நிக்லேசின் செல்போனை தண்டவாளம் ஓரம் கீழே நின்று கொண்டு இருந்த ஒருவர் பறித்து சென்றார்.


இது குறித்து அவர் பாந்திரா ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நிக்லேசிடம் செல்போன் பறித்த பைசல் சேக்(வயது21) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 13 ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலிபர் பைசல் சேக்கிற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. 

தொடர்புடைய செய்திகள்

1. செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3. திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்
அறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
5. பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-