மாவட்ட செய்திகள்

சிலை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ்சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் + "||" + Arrested in the case of smuggling Subhasragandur in Kumbakonam court

சிலை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ்சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்

சிலை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ்சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்
சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ்சந்திரகபூரை போலீசார் நேற்று பலத்த பாதுகாப்போடு கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இதைப்போல அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகளும் விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகளும் திருட்டுபோனது.


ஒத்தி வைப்பு

இந்த 3 வழக்குகளிலும் அமெரிக்காவில் இருந்த சுபாஷ்சந்திரகபூருக்கு தொடர்பு உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனால் சுபாஷ்சந்திரகபூரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை

விசாரித்த நீதிபதி வருகிற 30-ந் தேதிக்கு(புதன்கிழமை) வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்
அறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
4. பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
திருமக்கோட்டை அருகே மதுக்கடை ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி கடையில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர்.