மாவட்ட செய்திகள்

பா.ஜனதா தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை - ஜி.டி.தேவேகவுடா + "||" + none of the bjp leaders spoke to me - gt devegowda

பா.ஜனதா தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை - ஜி.டி.தேவேகவுடா

பா.ஜனதா தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை - ஜி.டி.தேவேகவுடா
பா.ஜனதா தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை என ஜி.டி.தேவேகவுடா தெரிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டு அபார வெற்றிபெற்ற ஜி.டி.தேவேகவுடா கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதியாக உள்ளது. நான் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை அல்ல. அதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பா.ஜனதாவுக்கு வரும்படி, அக்கட்சி தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. நான் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன். கட்சி எடுக்கும் எல்லா முடிவுக்கும் நான் கட்டுப்பட்டு நடப்பேன். இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.