கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் கண்ணில் கருப்பு துணி கட்டி தர்ணா


கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் கண்ணில் கருப்பு துணி கட்டி தர்ணா
x
தினத்தந்தி 17 May 2018 9:00 PM GMT (Updated: 17 May 2018 1:02 PM GMT)

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் கண்ணில் கருப்பு துணியை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் கண்ணில் கருப்பு துணியை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்று உள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணிக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளது. ஆனால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து எடியூரப்பா முதல்–மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில்...

இந்த நிலையில், கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்–மந்திரியாக பொறுப்பேற்றதை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, மத்திய அரசை கண்டித்தும், கர்நாடக மாநில கவர்னரை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில், மாவட்ட துணை தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் தனசிங்பாண்டியன், மாரியப்பன், அய்யப்பன், சேவாதள தலைவர் சரவணன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story