நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.66¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் அனுப்பப்பட்டன


நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.66¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 17 May 2018 8:30 PM GMT (Updated: 17 May 2018 2:15 PM GMT)

நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.66¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

நெல்லை, 

நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.66¾ கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

பழைய ரூபாய் நோட்டுகள்

கடந்த 2016–ம் ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து அந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு அவகாசமும் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றினார்கள்.

அந்த பழைய ரூபாய் நோட்டுகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாகாப்புடன் ரிசர்வ் வங்கிக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் இருந்து கோடிக்கணக்கான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரெயில் மூலம்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெட்டிகளில் ரூ.66 கோடியே 80 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story