டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட வேண்டும்
டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட அரசு உத்தரவிட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர்
டாஸ்மாக் பணியாளர் சங்க விருதுநகர் கிளை கூட்டம் விருதுநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சங்க செயலாளர் ஜெகதீஷ் குமார் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் பெருமாள்ராஜ், பாலமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட அரசு உத்தரவிட வேண்டும். வங்கிக்கு பணம் செலுத்த செல்லும் பணியாளர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது பணியாளர்களுக்கு உரிய ஆயுத பயிற்சி கொடுத்து கைத்துப்பாக்கி தர வேண்டும்.
ஓய்வு பெறுவோருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆணையிடுவதோடு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி உள்ளிட்ட பலன்களை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story