கமுதி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு


கமுதி அருகே அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே கோவில் திருவிழாவின் போது அரிவாளால் வெட்டப் பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக மதுரை கோர்ட்டில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

கமுதி

கமுதி போலீஸ் சரகம் பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் செந்தில்(வயது 38). கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஊரில் கோவில் திருவிழாவை யொட்டி கரகாட்டம் நடை பெற்றது. இதனை பார்த்துக் கொண்டிருந்த செந்திலை நள் ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் திடீரென அரிவா ளால் தலையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த செந்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவரது தாய் புஷ்பம் கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செந் தில் பரிதாபமாக இறந்து போனார். அவரை குடும்ப பிரச்சினை காரணமாக அரி வாளால் வெட்டியதாக கூறப் படுகிறது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக் காக பதிவு செய்து கமுதி போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பம்மனேந் தல் கிராமத்தை சேர்ந்த நிறை குளத்தான் மகன் சதீஷ் குமார்(19) என்பவர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Next Story