ஆலவிளாம்பட்டி, நென்மேனியில் மாட்டுவண்டி பந்தயம்


ஆலவிளாம்பட்டி, நென்மேனியில் மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 7:46 PM GMT)

ஆலவிளாம்பட்டி, நென்மேனியில் கோவில்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஒன்றியம் ஆலவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டு நாச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலவிளாம்பட்டி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 23 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 10 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மதகுபட்டி மாம்பழம் வெள்ளைக்கண்ணு, 2-வது பரிசை நரசிங்கம்பட்டி ஜனனி, 3-வது பரிசை ஆனையூர் சரவணன் ஆகியோரது வண்டிகள் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புரண்டிபுதுக்குடி பிரபா மாட்டு வண்டியும், 2-வது பரிசை பாண்டிகோவில் குபேந்திரன், 3-வது பரிசை ஜெய்ஹிந்த்புரம் அக்னிமுருகன் மாட்டுவண்டிகள் பெற்றன.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் நென்மேனி பேச்சியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நெம்மேனி-சாக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 41 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடு மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எஸ்.பி.பட்டினம் முகமது வண்டியும், 2-வது பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா, 3-வது பரிசை சிங்கம்புணரி பிரகலாதன் வண்டிகளும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டியும், 2-வது பரிசை பூக்கொல்லை ஸ்ரீநிவாஸ், 3-வது பரிசை கல்லுப்பட்டி மகாராஜா வண்டிகள் பெற்றன. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 20 வண்டிகள் கலந்துகொண்டு 2 பிரிவாக நடைபெற்றன. முதல் பிரிவில் முதல் பரிசை இந்திராநகர் உமர், 2-வது பரிசை தேவகோட்டை சரவணன், 3-வது பரிசை நெம்மேனி பேச்சியம்மன் வண்டிகள் பெற்றன. 2-வது பிரிவில் முதல் பரிசை ஓனாங்குடி அரங்க கோனார் வண்டியும், 2-வது பரிசை மருங்கூர் அப்துல்காதர், 3-வது பரிசை வெளிமுத்தி பவுன்ராஜ் வண்டிகள் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story