மாவட்ட செய்திகள்

பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று சில்மிஷம் வாலிபர் கைது + "||" + 5-year-old girl took home the young man arrested for sexual harassment

பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று சில்மிஷம் வாலிபர் கைது

பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச்சென்று சில்மிஷம் வாலிபர் கைது
பண்ருட்டியில் 5 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச்சென்று சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி

பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சேட்டு என்கிற தியாகராஜன்(வயது 30). சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

பின்னர் அவளை, அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு அந்த சிறுமியை, தியாகராஜன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வீட்டில் இருந்து அழுது கொண்டே அந்த சிறுமி வெளியே வந்தார். தனதுக்கு நடந்த கொடுமை குறித்து அவள், தனது தாயிடம் கூறி அழுதாள்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொம்மிடி அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
பொம்மிடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.