வாடிப்பட்டி போலீஸ் நிலையம் முற்றுகை
வாடிப்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் இருந்து செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டிவரை மினி பஸ் இயக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் செல்லும் சில மாதங்களாக ஷேர்ஆட்டோடிரைவர்களுக்கும் மினி பஸ் டிரைவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக கிராமப்புறத்திற்கு செல்லும் மினிபஸ் செல்லும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக் குள்ளானார்கள். நேற்று மாலை கச்சைகட்டி, சொக்கலிங்கபுரம், ராமயன்பட்டி கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வாடிப்பட்டி போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டனர். தடையின்றி மினிபஸ்சை இயக்குவதோடு ஷேர்ஆட்டோடிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். முடிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினாவிடம் மனுக்கள் கொடுத்தனர்.
இதற்கிடையே மின் பஸ் டிரைவர்களுக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.
மினி பஸ்டிரைவர் அம்பேத்சந்திரன், கண்டக்டர் கோபிராஜா, ஆட்டோ டிரைவர்கள் கோபாலகிருஷ்ணன், பாலமுருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் மினி பஸ்டிரைவர் செந்தில்குமார் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story