கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தேர்தல் பணியால் நிர்வாகம் முடங்குவதாக கூறி, ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
நாமக்கல்,
கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் இன்னல்களுக்கு ஆளாவதோடு, சங்க நிர்வாகம் முற்றிலும் முடங்கி உள்ளதாகவும், அதனை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதற்கிடையே அந்த கோரிக்கைக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் வருகிற 21-ந் தேதி முதல் சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்வது என சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் போராட்ட மாதிரி கடிதமும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பில் செல்வது தொடர்பாக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் சங்க பணியாளர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடவடிக்கைகளால் தொடக்க கூட்டுறவு சங்க நிர்வாகம் முடங்கி உள்ளது. இதனால் சங்க பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் சங்கத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது குறித்து ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால் சங்க பணியாளர்கள் அனைவரும் வருகிற 21-ந் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story