மாவட்ட செய்திகள்

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் + "||" + The Lorries strike on July 20 to insulate diesel prices

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
நாமக்கல்,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று புதுடெல்லியில் அதன் தலைவர் மிட்டல் தலைமையில் நடந்தது.


இந்த கூட்டத்தில் தினசரி ஏற்றம் கண்டு வரும் டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டு தொகைக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும், சுங்க கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

ஏற்கனவே லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தினசரி டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே லாரி உரிமையாளர்களின் முக்கியமான 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழுமையாக பங்கேற்கும். அவ்வாறு லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது
நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் - கேரளா, மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல்
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக, கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
3. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
4. கணக்கெடுக்கும் பணியை தனியாருக்கு தர எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மின்சார பயன்பாட்டினை கணக்கெடுக்கும் பணியினை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
5. நாகையில் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
நாகையில் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.