மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம் + "||" + National Dengue Awareness Day in Ariyalur District

அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம்

அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம்
அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
அரியலூர்,

அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ராஜீவ் நகரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயனற்ற பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் தேங்கும் நீரினை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், நல்லமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேச்சு
டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
2. பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வுபெற்ற தபால்காரர் சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தில் ஓய்வு பெற்ற தபால்காரர் நெல்சன் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். அவர், சைக்கிளில் சென்று பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
3. விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கூறினார்.
4. பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மணப்பாறையில் வரவேற்பு
பனை மரங்களை காக்க வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை வந்த அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
5. கிருஷ்ணராயபுரம், நொய்யலில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
கிருஷ்ணராயபுரம், நொய்யலில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.