ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்
ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் ஊதியம் வழங்கவேண்டும், நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் சுதேசி மில் அருகே நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார். தலைவர் பிரேமதாசன் முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்கள் கலை, தமிழரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story