டோம்பிவிலியில் 15 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிப்பு


டோம்பிவிலியில் 15 வயது சிறுமி காரில் கடத்தி கற்பழிப்பு
x
தினத்தந்தி 18 May 2018 5:14 AM IST (Updated: 18 May 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

டோம்பிவிலியில் 15 வயது சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் டோம்பிவிலி காம்பல்பாடா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது, 25 வயது வாலிபர் உள்பட 3 பேர் அவளிடம் வந்து பேச்சு கொடுத்தனர்.

திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கைக்குட்டையால் சிறுமியின் முகத்தை மூடினர்.

இதில் சிறுமி மயக்கமடைந்தாள். பின்னர் 3 பேரும் அவளை காரில் கடத்தி சென்று, கற்பழித்து உள்ளனர்.

இதற்கிடையே மருந்து கடைக்கு சென்ற மகளை காணாமல் சிறுமியின் பெற்றோர் தேடி அலைந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினாள்.

இதை கேட்டு பதறி போன பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி கற்பழித்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story