மாவட்ட செய்திகள்

மும்பை - நவிமும்பை இடையே அமையும் பறக்கும் ரெயில் பாதை பணிகள் டிசம்பரில் தொடங்கும் + "||" + Mumbai - Navi Mumbai Between Flying rail track work

மும்பை - நவிமும்பை இடையே அமையும் பறக்கும் ரெயில் பாதை பணிகள் டிசம்பரில் தொடங்கும்

மும்பை - நவிமும்பை இடையே அமையும் பறக்கும் ரெயில் பாதை பணிகள் டிசம்பரில் தொடங்கும்
மும்பை - நவிமும்பை இடையே அமையும் பறக்கும் ரெயில் பாதை பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எம்.ஆர்.வி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை,

நவிமும்பை மாநகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நவிமும்பையில் பெருகி வரும் மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மும்பை - நவிமும்பை பன்வெல் இடைேய ரூ.10 ஆயிரத்து 870 கோடி செலவில் பறக்கும் ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.


49 கி.மீ. தூரத்தில் அமையும் இந்த பறக்கும் ரெயில் பாதை மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் தொடங்கி நவிமும்பை விமான நிலையம் வரையில் அமைக்கப்படுகிறது.

பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகளை மும்பை ரெயில் விகாஸ் கழகம் (எம்.ஆர்.வி.சி.) செய்கிறது. இதுபற்றி எம்.ஆர்.வி.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பறக்கும் ரெயில் பாதை திட்டம் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதம் மந்திரி சபை ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். பணிகளை வருகிற 2023-ம் ஆண்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தற்போது மும்பையில் இருந்து பன்வெல் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெலுக்கு 50 நிமிடத்தில் சென்று விடலாம் ” என்றார்.