மாவட்ட செய்திகள்

விவசாய விளைபொருள் சந்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் மந்திரி சுபாஷ் தேஷ்முக் + "||" + Agricultural Production Market will be upgraded to international standards

விவசாய விளைபொருள் சந்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் மந்திரி சுபாஷ் தேஷ்முக்

விவசாய விளைபொருள் சந்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் மந்திரி சுபாஷ் தேஷ்முக்
மும்பை வாஷியில் உள்ள விவசாய விளைபொருள் சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றாக கூறப்படுகிறது.
மும்பை,

அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சந்தையின் உள்கட்டுமானம் மற்றும் கடைகள் விரிவுபடுத்தப்படவில்லை என தெரிகிறது. இதனால் வியாபாரிகள் அதிகளவில் சிரமப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் மராட்டிய சந்தை துறை மந்திரி சுபாஷ் தேஷ்முக் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உடனான சந்திப்பு மும்பையில் நடைபெற்றது.


அப்போது வாஷியில் உள்ள விவசாய விளைபொருள் சந்தையை சர்வதேச தரத்தில் மேம்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி தெரிவித்தார்.

இதற்காக சந்தையின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் அவர் வியாபாரிகளை வலியுறுத்தினார்.