வீரபாண்டியில் மதுவிற்ற 6 பேர் கைது


வீரபாண்டியில் மதுவிற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2018 12:11 AM GMT (Updated: 18 May 2018 12:11 AM GMT)

திருப்பூர் மற்றும் வீரபாண்டியில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி

திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், குளத்துப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.

இதையடுத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக மதுரை வாடிபட்டி பகுதியை சேர்ந்த முத்துபாண்டி(வயது 29), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ்(47), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

அதே போல் வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து திருப்பூர் மது விலக்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இடுவம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பாலமுருகன் (27) என்பவரிடமிருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்செய்தனர். அதேபோல், வீரபாண்டி டாஸ்மாக் கடை அருகே விற்பனை செய்து கொண்டிருந்த முத்துக்குமார் (36) என்பவரிடமிருந்து 20 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அய்யம்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பழனிசாமி (50) என்பவரிடமிருந்து 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைதுசெய்தனர்.

Next Story