தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்


தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம்  போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 May 2018 3:00 AM IST (Updated: 18 May 2018 6:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி கூடம்

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் ரூ.2 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி நகர இணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அனைவரும் பயன்படுத்தலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் போலீசார் உடல்திறனை பாதுகாப்பதற்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 45 போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸ் பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை உள்ளன. இங்கு மொத்தம் 150 போலீசார் உள்ளனர்.

50 வயதுக்கு உட்பட்டவர்கள் அவசியம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு மேல் உள்ளவர்கள் உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தவிர கல்லூரி மாணவர்கள், பொதுமக்களும் இந்த உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தலாம். 24 மணி நேரமும் பயிற்சிக்கூடம் திறந்து இருக்கும். இதனை போலீசாரும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கூறினார்.


Next Story