மாவட்ட செய்திகள்

பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி: வீட்டின் உரிமையாளர் கைது + "||" + The Balkans fell down The girl is dead House owner arrested

பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி: வீட்டின் உரிமையாளர் கைது

பால்கனி இடிந்து விழுந்து பெண் பலி: வீட்டின் உரிமையாளர் கைது
வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. தலையில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). பூ வியாபாரி. இவருடைய மனைவி லட்சுமி (45). இவர்கள் உதயகுமார் (54) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மாடியில் உதயகுமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


நேற்று முன்தினம் மாலை நடராஜன் தனது மனைவியுடன் வீட்டின் முன்புறம் அமர்ந்து பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்த லட்சுமி பரிதாபமாக இறந்தார். நடராஜன், அவருடைய பேத்தியான 9 மாத குழந்தை லக்சனா, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மகேஷ்(24) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரான உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்ததாக கூறி உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.