நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 4:45 AM IST (Updated: 19 May 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story