மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்க தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும், மத்திய அரசு அதிகாரி வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்க தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.
புதுச்சேரி,
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம், உயர்கல்வியில் 5 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக கோர்ட்டு, சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய சான்றிதழ் மாநில அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
கோவாவில் அதிகபட்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் வழங்குகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்க தனியாக ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுச்சேரியிலும் தனியாக ஆணையரை நியமிக்கவேண்டும். இதுதொடர்பாக தலைமை செயலாளரிடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு கமலேஷ் குமார் பாண்டே கூறினார்.
Related Tags :
Next Story