பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 4:31 AM IST (Updated: 19 May 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோரிப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை,

பாலஸ்தீனியர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட இடத்தை இஸ்ரேல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோரிப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இல்யாஸ் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அமெரிக்கா துணையுடன் இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரபு நாடுகள் இஸ்ரேலுடனான அரசியல், வர்த்தக தொடர்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும்.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவின் மீதான தடை நீக்கப்பட வேண்டும். பாலஸ்தீனியர்களிடம் அபகரிக்கப்பட்ட இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story