வில்லியனூர் அருகே கஞ்சா பொட்டலத்துடன் வாலிபர் கைது
வில்லியனூர் அருகே போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா பொட்டலத்துடன் ஒரு வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வில்லியனூரை அடுத்த ஜி.என்.பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா சிக்கியது. தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
இதில் ஜி.என்.பாளையம் நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மருதமணி (வயது 24) என்பது தெரிய வந்தது. அவர் தெரிவித்த தகவலின்பேரில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங் களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையில் வாலிபர் மணிகண்டனுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களைப் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story