ஐதராபாத்துக்கு சென்ற சித்தராமையா ஓட்டலில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார்
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்ற சித்தராமையா ஓட்டலில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார்.
மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பா.ஜனதாவினர், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர்.
இதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்க தொடங்கினர். அவர்களை ஒருங்கிணைத்து ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களை அங்கிருந்து பஸ் மூலம் ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு சொகுசு ஓட்டலில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஐதராபாத்துக்கு சென்றார். அவருடன் குலாம்நபிஆசாத் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்றனர். அவர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் சொகுசு ஓட்டலுக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் எடுத்துக்கூறி விரிவாக விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story