எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு


எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 19 May 2018 10:31 AM IST (Updated: 19 May 2018 10:31 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

எடப்பாடி,

எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அவரை சங்கிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன் ,தாசில்தார் கேசவன், தனி தாசில்தார் செல்வகுமார், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் ரோகிணி நட்டு வைத்தார். அதைத்தொடர்ந்து இ-சேவை மையத்திற்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, 10 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

பின்னர் பதிவேடுகள் வைத்திருக்கும் அறைக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் ரோகிணி பதிவேடுகளை வரிசையாக அடுக்கி வைத்து எளிதில் எடுக்கும் வண்ணம் பெயர் எழுதி வைக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் அணைவரும் அன்பாக நடந்து கொண்டு அவர்களின் குறைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து பூலாம்பட்டிக்கு சென்று படகுத்துறை, பசுமை வீடுகள் மற்றும் தனிநபர் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story