நெல்லை அருகே பஸ்சுக்கு தீவைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
நெல்லை அருகே பஸ்சுக்கு தீவைத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே பஸ்சுக்கு தீவைத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஸ்சுக்கு தீவைப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்து கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் சென்றது. வடக்கு தாழையூத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை திருப்பிய போது மர்ம நபர்கள் 2 பேர் பஸ்சுக்குள் ஏறினர். அவர்கள் பஸ் உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இதில் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி பஸ் தீவைத்து கொளுத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும் ஒருவர் கைதுஇதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வடக்கு தாழையூத்தை சேர்ந்த சிவராமன் (வயது 25) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.