களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்


களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 20 May 2018 2:15 AM IST (Updated: 19 May 2018 7:52 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீஸ்வரர்–கோமதி அம்பாள் கோவில் ஒன்றாகும்.

களக்காடு, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் களக்காடு சத்தியவாகீஸ்வரர்–கோமதி அம்பாள் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலையில் கொடி பட்டம் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பகலில் சிறப்பு அபிஷேகங்கள், இரவில் சுவாமி–அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

தேரோட்டம்

விழாவில் 8–ம் நாளான வருகிற 26–ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை சாத்திய கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9–ம் திருநாளான 27–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், விழா மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story