சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சுரண்டை,
சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்சுரண்டையில் மகாத்மா காந்தி பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்ததால், அதனை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுரண்டை– சேர்ந்தமரம் ரோட்டில் புது மார்க்கெட் அருகில் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்லாமல், சுரண்டை அண்ணா சிலை அருகில் நீண்ட நேரம் நின்று பயணிகளை ஏற்றி சென்றனர்.
சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்லாததால், நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், சுரண்டை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அனைத்து பஸ்களும் செல்ல...நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் காளியப்பன் தலைமை தாங்கினார். சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெய்வேந்திரன், வெற்றிவேல், சக்திவேல், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நெல்லையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் அழகுபார்வதி அம்மன் கோவில் ரோடு, அண்ணா சிலை, புது மார்க்கெட் வழியாக சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். சுரண்டை அண்ணா சிலை அருகில் 2 நிமிடங்களுக்கு மேல் நின்று பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.