ரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள்–குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்


ரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள்–குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 9:30 PM GMT (Updated: 19 May 2018 6:36 PM GMT)

ரெயில் பயணத்தில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவ விரைவில் புதிய திட்டம் வர இருக்கிறது.

ஈரோடு,

ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், ரெயில்வே காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது? என்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் தலைமை தாங்கி பேசினார்.

அதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் கருத்தரங்கில் பேசியபோது கூறியதாவது:–

ரெயிலில் பணயம் செய்யும்போது பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்டால் 182 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் பெண்கள், குழந்தைகள் ரெயிலில் பயணம் செய்யும்போது பாதிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவ புதிய திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது. அதன்படி ரெயில் பெட்டிகளில் ‘பெனிக்பட்டன்’ என்ற பட்டன் பொறுத்தப்பட உள்ளது.

ரெயிலில் பயணம் செய்யும் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் பாதிக்கப்படும்போது இந்த பட்டணை அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும்போது ரெயிலில் எந்த பெட்டியில் பிரச்சினை என்பது குறித்து ரெயில்வே கார்டுக்கு தெரியவரும். அவர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story