அ.தி.மு.க. அரசு சுயமாக செயல்படவில்லை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அ.தி.மு.க.அரசு சுயமாக செயல்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
காரியாபட்டி,
திருச்சுழியில் தி.மு.க. இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களும் எம்.எல்.ஏ.க்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினார்கள். முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ. வ.வேலு சிறப்புரையாற்றினர். அவர் கூறியதாவது:–
தமிழகத்தை மத்திய அரசு கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அ.தி.மு.க. அரசு சுயமாக செல்படவில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார்கள்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் ரூ.45 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் 85 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் ஜப்பானில் இருந்து வந்து 3மாதம் காத்துக் கிடந்தது. அந்த நிறுவனத்திற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. அந்த நிறுவனம் தற்போது ஆந்திராவிற்கு சென்று விட்டது.
தமிழை பழமையான மொழி என்று பேசிய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள விமானத் துறைகளில் உள்ள விமானங்களில் ஏன் தமிழ் பேசுவது இல்லை. சென்னையிலிருந்து மதுரை வரும் விமானத்தில் பணிப் பெண்கள் ஏன் தமிழில் அறிவிப்பு செய்வதில்லை.தமிழை போற்றும் பிரதமர் மோடி விமானங்களில் தமிழில் பேச நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சுயாட்சி பறிக்கப் பட்டுள்ளது இவ்வாறு பேசினார்