சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும் - போலீஸ் கமிஷனர்


சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும் - போலீஸ் கமிஷனர்
x
தினத்தந்தி 20 May 2018 3:56 AM IST (Updated: 20 May 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும் என போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விபத்தை குறைப்பது தொடர்பாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் மாநகர போலீஸ்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச கூடாது என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு குறும்படம் கூட்டத்தில் ஒளிபரப்பாகி காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் பேசும்போது, ‘விபத்துகளை குறைக்க போலீஸ்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தியேட்டர்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாகவும், இடைவேளையின் போதும் கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும். அதன்மூலம் ஏராளமானவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சென்றடையும். இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்‘ என்று கூறினார்.

இதில் மாநகரில் உள்ள 18 தியேட்டர்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story