சிகிச்சைக்கு வந்த சிறுமி மானபங்கம் டாக்டர் கைது
தானே மாவட்டம் கல்யாண், சிகான்னர் பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் ஜித்தேந்திர பாட்டீல் (வயது45).
அம்பர்நாத்,
டாக்டர் ஜித்தேந்திர பாட்டீல் கிளினிக்கிற்கு சம்பவத்தன்று 15 வயது சிறுமி ஒருவள் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற தாயுடன் வந்தார்.
அப்போது டாக்டர் ஜித்தேந்திர பாட்டீல் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. பரிசோதனை அறையில் இருந்து வெளியே வந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறினாள். அதிர்ச்சி அடைந்த தாய் சம்பவம் குறித்து மகாத்மா புலே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story