நெல்லை–ஈரோடு பாசஞ்சர் ரெயில் இயக்கத்தில் மாற்றம்
கரூர்–ஈரோடு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56320) இன்று (திங்கட்கிழமை) கோவை–பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அதனை தொடர்ந்து இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.
அதேபோல, நெல்லையில் இருந்து மதுரை வழியாக ஈரோடு செல்லும் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56826) இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story