சப்–இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவு
சிவகங்கை மாவட்தில் பணிபுரிந்து வரும் சப்–இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுஉள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியம் 6 சப்– இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 154 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:– காளையார்கோவில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன் சிவகங்கை நகர் சப்–இன்ஸ்பெக்டராகவும், காரைக்குடி தெற்கு போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் தேவகோட்டை நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த அரவிந்தராஜன் வேலாயுதபட்டினம் சப்–இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.
சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள்ஏற்கனவே வேலாயுதபட்டினத்தில் இருந்த ராஜன் தேவகோட்டை நகருக்கு மாற்றப்பட்டார். நாச்சியார்புரத்தில் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த விமலா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். இதுதவிர மாவட்டம் முழுவதும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் மற்றும் போலீசார் உள்பட 154 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.