கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் சிக்கினார்


கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 21 May 2018 1:42 AM IST (Updated: 21 May 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

கோழிக்கோடு,

கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அரபு நாட்டில் இருந்து நேற்று அதிகாலை ஒரு விமானம் வந்தது.

 அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி, தங்கத்தை உருக்கி கம்பி வடிவில் தனது பெல்ட்டில் இணைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.20 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். உடனே அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், கோழிக்கோடு கல்லாய் பகுதியை சேர்ந்த பிஜீத் ரகுமான்(வயது 30) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.


Next Story