பள்ளிபாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


பள்ளிபாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 May 2018 3:45 AM IST (Updated: 21 May 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் மொளசி அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் ஊராட்சி சார்பில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக மோட்டார் பழுது அடைந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

இதை சரி செய்யக்கோரியும், குடிநீர் கேட்டும் நேற்று காலை 8 மணியளவில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மொளசி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story