வாணியம்பாடி அருகே ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
வாணியம்பாடி அருகே ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் நிலோபர் கபில் திறந்து வைத்தார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த பாப்பானேரி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி கவுண்டர், கேசவன், நாட்டாண்மை சின்னவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் லஷ்மிகாந்தன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.
இதில் தாசில்தார் கிருஷ்ணவேனி, வட்ட வழங்கல் அலுவலர் கணேசன், நகர செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story