சேலத்தில் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு - 6 ஆயிரத்து 49 பேர் எழுதினர்
சேலத்தில் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 6 ஆயிரத்து 49 பேர் எழுதினர்.
சேலம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பால பாரதி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை கலெக்டர் ரோகிணி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 21 மையங்களில் நடந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 8 ஆயிரத்து 738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6 ஆயிரத்து 49 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 689 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story