சென்னையில், 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்


சென்னையில், 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
தினத்தந்தி 21 May 2018 5:36 AM IST (Updated: 21 May 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தி பிறந்தநாள்: சென்னையில், 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், ப.சிதம்பரம் பங்கேற்பு.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. அகில இந்திய அன்னை சோனியாகாந்தி நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

விழாவில் 71 ஜோடிகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story