தானேயில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் சிக்கினர்


தானேயில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 May 2018 5:37 AM IST (Updated: 21 May 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தானே,

தானே கல்வா பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம ஆசாமிகள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, வாலிபர்கள் 2 பேர் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருந்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் உருவத்தை கொண்டு இருவரையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அப்ரார் சேக் (வயது21), ரம்ஜான் சேக் (27) என்பது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து காவலாளிகள் இ்்ல்லாத கட்டிடங்களில் புகுந்து கொள்ளையடித்து வந்ததாகவும், இதுவரை 11 வீடுகளில் கைவரிசை காட்டியிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நகை, பணம், மடிக்கணினி, 2 செல்போன்கள் என ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 24-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.


Next Story