தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்


தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 21 May 2018 5:39 AM IST (Updated: 21 May 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

1½ ஆண்டு ஜெயில் தண்டனையை குறைக்க மேல் முறையீடு செய்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் நந்தன்(வயது26). இவர் வாலிபர் ஒருவரை மிரட்டி ரூ.25 லட்சம் பறித்ததாக 2016-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி மும்பை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நந்தனுக்கு 1½ ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.

இந்தநிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை குறைக்க வேண்டும் என நந்தன் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

மேலும் மேல்முறையீடு மனு மீதான விசாரணையின் போது நந்தன், புகார்தாரருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்காக தான் அவர் ரூ.25 லட்சம் தந்ததாகவும் கூறினார். எனினும் அவரது வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

மேலும் அவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 1½ ஆண்டு தண்டனையை அதிகரித்து, 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.


Next Story