பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் வாங்கா குடும்ப உறுப்பினரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து இருந்தோம்
பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாங்கா குடும்ப உறுப்பினரை வேட்பாளராக நிறுத்த இருந்தோம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
தானே,
இதற்கிடையே சிந்தாமன் வாங்காவின் மகன் ஸ்ரீனிவாஸ் வாங்கா பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து அவரை பால்கர் தொகுதி வேட்பாளராக சிவசேனா களமிறக்கியது.. மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா பால்கர் தொகுதியில் தனது வேட்பாளரை வாபஸ் பெறவேண்டும் என பா.ஜனதா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சிவசேனா இதனை ஏற்க மறுத்துவிட்டது.
இந்தநிலையில் ராஜேந்திர கவித்தை பா.ஜனதா கட்சி பால்கரில் நிறுத்தியது. மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் பால்கர் தொகுதியில் எதிரெதிராக போட்டியிடுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் பால்கர் தொகுதியில் உள்ள காசா கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-வாங்கா குடும்பத்தினர் ஒருவரை பால்கர் தொகுதியில் வேட்பாளராக முன்னிறுத்த பா.ஜனதாவினர் தயாராக இருந்தோம். இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் கூறியபோது அவர் மந்திரி சுபாஷ் தேசாயிடம் (சிவசேனா) பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் திடீரென ஸ்ரீனிவாஸ் வாங்காவை வேட்பாளராக சிவசேனா அறிவித்துவிட்டது.
பால்கர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என யாரும் கற்பனை செய்து பார்த்திருக்கவில்லை. வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட சிந்தாமன் வாங்காவை தான் பால்கரில் வேட்பாளராக தேர்ந்தெடுக்க இருந்தோம். ஆனால் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.