சாக்குமூட்டையில் பிணம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன்
கோவையில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியதாக கைதான டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கோவை,
கோவை ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலை செய்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி மாலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற ஜெயந்தி திடீரென்று மாயமானார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிவக்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாத புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் எதிரில் சாக்கடை தண்ணீர் செல்லும் ஓடையில் சாக்குமூட்டையில் பிணம் கிடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் காணாமல்போன ஜெயந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு ராமநாதபுரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (34) என்பவர் ஜெயந்தியின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. உடனே போலீசார் மணிவேலை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்தனர். அப்போது அவர், ஜெயந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் மணிவேலை கைது செய்து, கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் ஜெயந்தியை கொலை செய்தது குறித்து அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது.
மணிவேலின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள எத்தரைபாளையம் ஆகும். இவர் ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கடந்த 3 ஆண்டாக கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
தற்போது சுந்தரம் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று விட்டார். இதனால், வீட்டை மணிவேல் கவனித்து வந்தார். அப்போது அவர் ஜெயந்தியிடம் தொடர்பு கொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர் கடந்த 17-ந் தேதி மாலையில் அங்கு சென்று வீட்டை சுத்தம் செய்தார். அப்போது மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டி உள்ளார். தனது ஆசைக்கு இணங்க அவர் மறுத்ததால், மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயந்தியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த ஜெயந்தியை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். கொலையை மறைக்கவும், தன்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஜெயந்தி அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடி உள்ளார். பின்னர் பிணத்தை சாக்குமூட்டைக்குள் வைத்து கட்டி, சிங்காநல்லூர் குளம் அருகே சாக்கடையில் வீசிவிட்டு மணிவேல் சென்று விட்டார். ஆனால் ஜெயந்தியிடம் செல்போனில் பேசியதை வைத்து போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையை மணிவேல் மட்டும்தான் செய்து உள்ளார் என்று அவர் கூறுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.'

Related Tags :
Next Story