வழக்குகளில் பறிமுதலான 178 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் அகற்றம்
மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 178 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
அடையாறு,
பல்வேறு வழக்குகளின் மூலம் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களின் வளாகத்திலேயோ அல்லது முன்பகுதியிலோ நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின்பு வழக்கு முடிந்ததும் அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக் கப்படும்.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு முடிந்தும் உரிமையாளர்களால் உரிமை கோராமல் உள்ள வாகனங்கள், திருட்டு வாகனங்கள் என மோட்டார்சைக்கிள்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று நிற்கின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் வெயிலிலும், மழையிலும் கிடந்து சிதிலமடைகின்றன. இதன் மூலம் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் இந்த வாகனங்களை அங்கு இருந்து அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை மாநகராட்சி மூலம் பொது ஏலம் விடுவது என தீர்மானித்து அந்த வாகனங்களை மாநகராட்சியில் ஒப்படைக்க அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 54 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், அடையாறு போலீஸ் நிலையத்தில் இருந்து 20 மோட்டார் சைக்கிள்கள் அகற்றப்பட்டு சென்னை மாநகராட்சி மண்டலம் 13-வது பகுதி பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போன்று மெரினா போலீஸ் நிலையத்தில் இருந்து 64 மோட்டார் சைக்கிள்களும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களும், பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆட்டோவும் சென்னை மாநகராட்சி மண்டலம் 9-வது பகுதி பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல போலீஸ் நிலையங்களில் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நீண்ட காலமாக போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அகற்றப்பட்டதால், மேற்கண்ட போலீஸ் நிலைய வளாகம் சுத்தமாகவும், விசாலமாகவும் காட்சியளிக்கின்றன.
இனி வரும் காலங்களில் இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீஸ் நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தி ஏலத்தில் விட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Tags :
Next Story