தனியார் நிறுவன ஊழியர் கட்டையால் அடித்து கொலை வடமாநில வாலிபர் கைது
திருவேற்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், சரவணா நகரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 55). இவர் திருவேற்காட்டை அடுத்த கீழ் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு, கங்காதரன் நிறுவனத்தில் இருந்தபோது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் நிறுவனத்துக்குள் நுழைய முயன்றார்.
அப்போது காவலாளி வரதராஜன் மற்றும் கங்காதரன் ஆகிய இருவரும் அந்த நபரை அங்கிருந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அந்த நபர் நகராமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து, வரதராஜன் மற்றும் கங்காதரன் ஆகிய இருவரும் சேர்ந்து, போதை ஆசாமியை விரட்டியடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கங்காதரன் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் கங்காதரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து, மயங்கினார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சேர்ந்து போதை ஆசாமியை தாக்கியதில், அவரும் மயக்கம் அடைந்தார்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் இருந்த கங்காதரனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையில் கங்காதரனை கட்டையால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிஜூ நாயக்(35) என்பதும், வானகரத்தில் தங்கி, பிளம்பராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிஜூ நாயக் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கங்காதரன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து, பிஜூ நாயக் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story