டாஸ்மாக் கடையை மூடக்கோரி ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார்-ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகே உள்ள கொழுவனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள டாஸ்மாக்கடையால் அவதி அடைந்து வருவதாக கூறி இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு, இங்கு டாஸ்மாக்கடை திறக்கப்படாது என கூறப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அந்த டாஸ்மாக் கடை அடைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது ஆதார்-ரேஷன் கார்டுகளை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கொழுவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஆதார்-ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோகர்ணம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாங்கள் கையில் வைத்திருந்த ஆதார்-ரேஷன் கார்டுகளை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுக்க 4 பேர் மட்டும் செல்ல வேண்டும் என கூறினர். இதையடுத்து கொழுவனூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 4 பேர் மட்டும் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் கணேஷிடம் கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story